இது என் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்க வேண்டிய தருணம்..
நிறைய ஆலோசனைகள்,
நிறைய குழப்பங்கள்,
இன்னும் நிறைய
அச்சுறுத்தல்கள்...
"psgய
விடாதடா..."
"central universityனா சும்மாவா..."
"psgல diversions அதிகம்... பாத்துக்கோ..."
"சென்ட்ரல் யுனிவேர்சிட்டி இப்போ தானே
கட்டியிருக்காங்க?"
"psg னா biochemistry ல படிக்கணும்... அத விட chemistry பரவாயில்லன்னு நினைக்கிறேன்"
"கோயம்புத்தூர விட்டுட்டு திருவாருர்லயா
படிக்கப்போற?"
என்னைக் குழப்ப மட்டும் எங்க இருந்து கெளம்பி
வாராங்கனே தெரியல..
'திருவாரூர்ல
இருக்கிற யார்டயாவது கேட்டா என்ன?', சட்டென்று தோன்றியது இந்த யோசனை...
பல
சிபாரிசுகளுக்குப் பின், அங்கு ஒரு தனியார் CBSE பள்ளியை நடத்திக்கொண்டிருக்கும், ஒருவரைத் தொடர்பு கொண்டேன்...
"central university கிடைத்ததென்றால் கண்ண மூடிட்டு எடு...செம campass,
செம faculty னு scienceகு அது தான் best ... எல்லாக் குழப்பத்தையும் தூக்கி போட்டுட்டு வா... தியாகேஸ்வரர்
துணை இருப்பார்"
beep ஒலி செவிகளுக்கு எட்டும் வரை கவனமாய் கேட்டுகொண்டிருந்தேன்..
பாடல்களிலும்
உவமைகளிலும் பல காலங்களாக இடம் பெற்று வரும், தமிழகத்தின் மிகப் பெரிய தேர் அந்த தியாகராஜர்
கோயிலுக்கு சொந்தமானது என்பது நினைவுக்கு வந்தது...
பெற்றோருடன்
சென்று மத்திய பல்கலைகழகத்தில் சேர்ந்தேன்... தியாகராஜரை ஏனோ மனம் தேடியது... மாலை 5 மணி அளவில் அந்த கோயிலை சென்றடைந்தோம்..
வெளியில் இருந்த அந்த கோயிலின் வரைபடம் அதன் ஒரு பகுதியைப் பார்க்கவே நேரம் போதாதென
எடுத்துரைத்தது..
தீர்கமான
தரிசனம்.. சரியான பாதையில் நடப்பதாய் நம்பிக்கை தோன்றியது...
கோயிலை விட்டு
வந்து கொண்டிருந்தோம்... வரும் வழி முழுக்க பிச்சைக்காரர்கள்...
"அய்யா...
அம்மா... உங்களுக்குப் புண்ணியமா போகும்மா... ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழி
காட்டுங்கம்மா..."
என வழி முழுக்க
கூச்சல்கள்... பல காலங்களாகா அங்கேயே இருக்கும் இவர்களுக்கு ஒரு வேளை உணவிற்கு கூட
வழி வகுக்காத இவரா, ஒரு முறை வந்து
போனதால் என் வழக்கை முழுவதும் எனக்கு துணை இருக்கப் போகிறார்... இனம் தெரியாத
அவநம்பிக்கை என்னுள்ளே...
சஞ்சலம் கொண்ட
மனதுடன் கோயிலை விட்டு வெளியே வந்தேன்... எதிரில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை
பூக்கடைகள், அர்ச்சனை பொருட்
கடைகள்... இவர்களுக்கு வழி வகுத்தவர் யார்? எதிரில் இருந்த அந்த மாற்றுத்திறனாளியின்
பூக்களுக்கு மட்டும் அதிக வாசனையை வைத்தவர் யார்? திரும்பிப் பார்த்தேன்... விண்ணைத் தொடும்
கோபுரத்தின் உச்சியில் நின்று பணி செய்யும் அந்த தோழரிடத்தில் துளி அச்சம்
இல்லாததெப்படி???
தெய்வத்தையும்
தன்னையும் நம்புபவர்களை கடவுள் என்றும் கைவிடுவதில்லை என தோன்றியது... உள்ளே
பிச்சை எடுப்பவர்கள் தன்னையும் நம்பாத, கடவுளையும் நம்பாத மூடர்கள் அல்லவா... அவர்களுக்கேன் கடவுள்
துணை இருக்க வேண்டும்?
அவநம்பிக்கை
மெதுவாக நீங்கியது... கோயில் வாசலை உற்று நோக்கினேன்.. அங்கே ஒரு விசைப் பலகை:
"உங்கள் சந்தேகங்களை இங்கே விட்டுச்
செல்கிறீர்கள்… இனி
தியகேஸ்வரர் துணை இருப்பார்...."

நல்ல முயற்சி கணேஷ்வர்! வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteநன்றி mam...
Delete